மார்க்கண்டேய முனிவரிடம் ஈசன் நீர் கால தேவனிடம் விடுபட்டு என்றும் சிரஞ்சிவீயாக வாழ்ந்து பல தீர்தங்களில் நீராடி எம்மை நும் மனதில் எங்கெங்கும் நினைக்கிறீர்களோ அங்கே மக்களுக்கு அருள்பாலித்து கடைசியில் கயிலாயம் வந்து எம்மை அடைவீர்களாக. அப்படீயே ஆகட்டும் சாமி என்று கூறி காசி , யமுனா, கங்கா, கோதாவரி, போன்ற பல புண்ணிய நதிகளில் நீராடி கடைசியில் திருக்களுக்குன்றம் உருத்திரகோடீஸ்வர தலத்திற்கு வந்து கிழக்கே பார்த்து ஸ்தானம் செய்ய குளக்கரையில் அமர்ந்து கொண்டிருக்கும் பொது 22 நதிகள் சங்கமித்து ஓடிக்கொண்டு இருக்கும் பொது ஒரு நதி எழுந்து அவரிடம் 16 சிரஞ்சீவியாக வாழக்கூடிய மார்க்கண்டேய முனிவரேய இக்குளம் சாதாரண குளம் அல்ல.இக்குளதின் வழியே 22 நதிகள் சங்கமித்து ஓடிக்கொண்டு இருக்கிறோம் . இக்குளத்தில் ஸ்தானம் செய்து எழுபவர்கள் செய்த பாவம் நீங்கி பிழைகள் அகன்று கருமாகள் அகன்று தோஷங்கள் அகன்று, அவரவர்கள் குடும்பம் ஸுபிக்ஷமாக இருக்கும் என்று கூறி அந்த நதி மறைந்தது. மார்க்கண்டேய முனிவர் என்ன அற்புதம் அப்படிப்பட்ட தெய்வீக தீர்த்தமா இது நாம் நடந்து வரும் பொது ஒரு எறும்பை நினைத்து தீங்கு நினைத்திருப்போம். அக்கருமாவை போக்க இத்தலத்திலேயே குளித்து நீராடியபோது அவர் மனதை ஒருநிலை படுத்தி ஒரு லிங்கத்தை பிரதிஸ்டை செய்து கரையில் வைத்தார். உடனே பக்தர்கள் அனைவரும் சுவாமியாக வந்தவர் ஒரு லிங்கத்தை பிடித்து வைத்துவிட்டாரே என்று நினைத்து அவரவர்கள் ஓடிப்போய் பால் பழம் புஷ்பம் போன்ற பூஜை பொருட்களை வாங்கி பொது அபிஷேகம் செய்ய பாத்திரம் இல்லாத காரணத்தால் ஓம் நமச்சிவாய என்று மார்க்கண்டேய முனிவர் உச்சரிக்கும் பொது ஓங்கார ஒலியுடன் வெண்ணிலவு போல் பிரகாசமாக அவர் முன் ஒரு சங்கு தோன்றியது. அதை எடுத்து சுத்தம் செய்துவிட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் காலத்தில் பக்தர்கள் அனைவரும் ஒன்று கூடி தாங்களே இந்த லிங்கத்திற்கு பெயர் சூட்டுங்கள்என்று கேட்க அப்படியே ஆகட்டும் என்று மார்க்கண்டேயர் இத்தளத்தில் பிரதிஷ்டை செய்ததால் இவருக்கு மார்க்கண்டேய ஈஸ்வரர் என்றும், இத்திருக்குளத்தில் சங்கை எடுத்து தீர்த்தத்தில் அபிஷேகம் செய்ததால் தீர்த்தகரை ஈஸ்வரர், இத்திருக்கரை சங்கு தோன்றியதால் சங்கு தீர்த்த குளம் என்றும் அழைக்கப்படும் என்று கூறினார்.
இத்தலத்தில் 22 நதிகள் சங்கமித்து ஓடிக்கொண்டு இருக்கும் இத்தருணத்தில் 22 கல் தூண்களையும் வைத்து ஆகம ரீதியாக கருங்கல்லில் வடிவமைத்து இருக்கிறார்கள்.அருள்மிகு பிரபாம்பிகை தெற்கு முகம் பார்த்து அருள்பாலிக்கிறார்.மேற்கு முன் முகப்பு நோக்கி நாயன்மார்களாக வடிவமைத்து இருக்கிறார்கள். யோகிகள் ஞானிகள் முனிவர்கள் கைலாயத்தில் நிற்கும் காட்சியாக முன் பகுதியில் வடிவமைத்து இருக்கிறார்கள்..அதற்கும் கீழ் கஜலக்ஷ்மி அருள்பாலிப்பது மிக சிறப்பாகும். இக்கோயிலில் பாதம் பட்டு கஜலட்சுமியை தரிசித்து விட்டு வாயில் படியில் சென்றால் பூர்வ ஜென்ம புண்ணிய பலன்கள் கிடைக்கும்.